

சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சாதியெனும் இருள் அகற்றிட தோன்றிய திராவிட பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக!
மயங்கி கிடந்த நம் இனம் விழித்தெழ, புரட்சிகர சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள்.
அவருக்கு திருவுருவ சிலையும் மணிமண்டபமும் அமைத்தது;
அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம் உருவாக்கியது உள்ளிட்டவை திராவிட மாடல் கிடைத்திட்ட பெரும் பெருமை!
சாதிபேதமற்ற சமுதாயத்தை கட்டமைத்திட, 'தமிழன்', 'திராவிடன்' ஆகிய சொற்களை அரசியல்களத்தில் ஆயுதமாக பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடு வாழ வேண்டும்! திராவிட சிந்தனை நோக்கி இளைஞர்களை ஈர்த்த அவரது வழியில் பயணிப்போம்! தமிழ் சமூகம் மேன்மையுற தொடர்ந்து பாடுபடுவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.