

சென்னை,
உகாதி திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உகாதியை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்! மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் #வெல்வோம்_ஒன்றாக! இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! திராவிட மாடல் 2.0 அமையட்டும்!”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.