திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் மாயம்

பண்ருட்டியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் மாயமானா.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் மாயம்
Published on

பண்ருட்டி, 

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். எம்.எஸ்சி. பட்டதாரியான இவர் அரசு தோவு எழுதுவதற்காக பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இதனிடையே இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் பட்டதாரி பெண், தனக்கு நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் நேற்று முன்தினம் பண்ருட்டி கோச்சிங் சென்டருக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய பெற்றோர் மாயமான மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான பட்டதாரி பெண்ணை தேடி வருகிறார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com