அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்

அலுவலக எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை கொடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்
Published on

சென்னை,

மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

போலீசார் விசாரணை

வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறாக சித்தரித்து பரப்புவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் அலுவலக எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை கொடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொல்லை கொடுப்பதாக மேயர் பிரியா புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com