சென்னை ரிப்பன் கட்டிடத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றினார்

சென்னை ரிப்பன் கட்டிடத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
Published on

சென்னை,

சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மேயர் ஆர்.பிரியா தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டும், தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளால் 'விரயத்திலிருந்து பெரும் வியப்பு' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க கண்காட்சியினை பார்வையிட்டதோடு, கண்கவரும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார். இந்த கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதையடுத்து மாநகராட்சியில் அதிக சொத்துவரி செலுத்தியவர்கள் மற்றும் முறையாக உரிய காலக்கெடுவிற்குள் சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களை பாராட்டிக் கடிதங்களை வழங்கினார். மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 81 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com