குழந்தைக்கு மருத்துவ உதவி: உறுதி அளித்த முதல் அமைச்சர் விஜய்

கோவையில் முதல்-அமைச்சர் 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்றார். திரும்பிச்செல்லும்போது கொட்டும் மழையில் குடைபிடித்தபடி கையசைத்தார்.
குழந்தைக்கு மருத்துவ உதவி: உறுதி அளித்த முதல் அமைச்சர் விஜய்
Published on: 

தமிழக முதல்-அமைச்சர் விஜய், கோவை காந்திபுரத்தில் பெரியார் நூலக கட்டிட திறப்பு விழாவுக்காக வருகை தந்தார். மேலும் 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்றார். காந்திபுரம் நகரின் மையப்பகுதி மற்றும் பஸ்நிலையங்கள் உள்ள இடம் என்பதால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. கோவையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்தவர்கள் முதல்-அமைச்சர் விஜய்யை காண கூடி நின்றனர். காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து ஏராளமானோர் முதல்-அமைச்சர் விஜய்யை பார்த்தனர்.

காந்திபுரம் பகுதியில் ஒரு குடும்பத்தினர் ஆருத்ரா என்ற சிறு குழந்தையின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி நின்றனர். உடனே முதல்-அமைச்சர் விஜய், வாகனத்தை நிறுத்தச்சொல்லி என்ன விவரம் என்று அவர்களை அழைத்து கேட்டார். அந்த குழந்தையின் புகைப்படத்தை வாங்கி பார்த்த முதல்-அமைச்சர் விஜய், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். மேலும் அவர்களது செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டார்.

இதையடுத்து குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான அனைத்தையும் முதல் அமைச்சர் செய்வதாக உறுதி அளித்துள்ளதாக, குழந்தையின் தாய் பிரியங்கா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒன்றரை வயதுக்குள் குழந்தைக்கு இந்த சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. குழந்தைக்கு இப்போதே 8 மாதம் கடந்துவிட்டது. இன்னும் 6 மாதங்களாக இருப்பதால் முதல் அமைச்சரிடம் சிகிச்சை உதவி கோரினோம். முதல் அமைச்சர், குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான அனைத்தை செய்வதாக தெரிவித்துள்ளார்’ என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com