ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நடத்த திட்டம்

புது மண்டபம் புனரமைக்கும் பணி பணிகள் நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்பட்ட பகுதியில் புது மண்டபத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு பூட்டப்பட்டது. இந்த புது மண்டபத்தைத் புதுப்பித்து மக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது கோயில் நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர், "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு 2026 ஜனவரி மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக புது மண்டபம் புதுப்பிப்பு பணிகள் முடிந்துவிடும். எனவே அதுவரை கால அவகாசம் தர வேண்டும்" என்று கூறினார்.
டிசம்பர் மாதம் இறுதிக்குள் புது மண்டபம் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துவிடுமா? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story






