பிரேமலதா தலைமையில் 23ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது.
பிரேமலதா தலைமையில் 23ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. தேமுதிகவுக்கு ஒரு எம்.பி.சீட் திமுக கொடுத்தது. இதில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலில் திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், பிரேமலதா தலைமையில் வரும் 23ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், புரட்சி அண்ணியார் , கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் திங்கட்கிழமை (23.08.2020) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்ட கழக செயலர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com