மேகதாது விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி சட்ட சபையில் இருந்து அ.தி.மு.க, எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்
மேகதாது விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
Published on

சென்னை,

மேகதாதுவில்  அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு அடம் பிடித்து வரும் நிலையில்,  அது தொடர்பாக இன்று  சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

அப்போது, தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு பேசலாம். ஆனால் செயல்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டார்கள்.மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட கர்நாடக அரசு வைக்க திமுக அரசு அனுமதிக்காது என்று கூறினார்.

இதனிடையே, மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com