மேகமலை விவகாரம்: மலைக்கிராம மக்களை சந்தித்து தேனி மாவட்ட கலெக்டர் ஆய்வு

மஞ்சனூத்து வன சோதனைச் சாவடி பகுதியில் மக்கள் சாலையில் அமர்ந்து கலெக்டரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேகமலை விவகாரம்: மலைக்கிராம மக்களை சந்தித்து தேனி மாவட்ட கலெக்டர் ஆய்வு
Published on: 

தேனி,

தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டாரங்களில் உள்ள 98 மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பாளர்கள் என காரணம் காட்டி அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்

வனத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து மலைக்கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி, 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு சென்று மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் பல தலைமுறைகளாக அங்கு வசிப்பதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.

கோரிக்கைகள்

மஞ்சனூத்து வன சோதனைச் சாவடி பகுதியில் மக்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தமிழக அரசு சார்பில் மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்றும், அரசு எப்போதும் மலைக்கிராம மக்களுக்குத் துணையாக இருக்கும் என்றும் கலெக்டர் உறுதியளித்தார்.

X