

சென்னை,
மேகதாது அணை விவகாரம் தீர்மானம் தொடர்பாக உரிமை மீறல் குறித்து அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி முழக்கத்தில் ஈடுபட்டார். சபாநாயகர் அனுமதி மறுத்ததால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேகதாது அணை விவகாரம் தொடர்பான தீர்மானம் குறித்து விளக்கமளித்த சபாநாயகர், புதிய நடுவர் மன்றம் என்ற திருத்தத்துக்கு உடனே ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தீர்மானத்தை நிறைவேற்றிய போதே ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேகதாது தீர்மனம் நிறைவேற்றப்பட்டதால் அது குறித்து பேச அனுமதிக்க முடியாது. மேகதாது தீர்மானத்தில் மேற்கொண்ட தீர்மானத்தை பற்றி பேசுவது தமிழக உரிமைக்கு எதிரானது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது மீண்டும் திருத்தம் கொண்டு வருவது அவை மீறல்” என்று கூறினார்.