வியாபாரி தற்கொலை

மதுகுடிப்பதை கண்டித்ததால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் இறந்ததால் 2 குழந்தைகளும் நிர்கதியாக நிற்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
வியாபாரி தற்கொலை
Published on

மேட்டுப்பாளையம் அடுத்த முத்திரையர் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 32). இவர் பஸ்நிலையம், பீச் பகுதியில் சுண்டல் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் அவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் 2 குழந்தைகளும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். இதுகுறித்து உறவினர்கள் ஈஸ்வரனை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் வேட்டியால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை தொடர்ந்து தந்தையும் இறந்ததால் 2 குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com