கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

கம்பத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்
Published on

கம்பம் ஓடைக்கரைத்தெருவை சேர்ந்தவர் ஷேக்அப்துல்காதர் (வயது 50). வடை கடை நடத்தி வந்தார். இவர் வியாபாரத்திற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையில் சரியாக வியாபாரம் ஆகவில்லை என தெரிகிறது. இதனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் கடன் தொல்லையால் மனமுடைந்த அவர் கடந்த 21-ந் தேதி எலி மருந்தை (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com