வியாபாரி தற்கொலை

திண்டுக்கல் அருகே தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
வியாபாரி தற்கொலை
Published on

திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி வேதமணி நகரை சேர்ந்தவர் முகமது அன்சாரி (வயது 32). இவர், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். அவருடைய மனைவி சம்சுல் குதா (29). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து முகமது அன்சாரி வாழ்ந்து வந்தார். பலமுறை சேர்ந்து வாழ அழைத்தும் சம்சுல் குதா வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முகமது அன்சாரி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com