சென்னை விமான நிலையத்திற்கான மெட்ரோ சேவை நிறுத்தம்


சென்னை விமான நிலையத்திற்கான மெட்ரோ சேவை நிறுத்தம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 Jun 2025 5:53 PM IST (Updated: 11 Jun 2025 5:54 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான நிலையத்திற்கான ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story