மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை இணைக்கும் 5-வது வழித்தடம் 44.6 கி.மீ தூரம் கொண்டது.
மெட்ரோ ரயில்
Published on

சென்னை,

சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை இடையே 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் உள்ளது.

மெட்ரோ ரெயில்

போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் நிறைவடையாத நிலையில், போரூரில் இருந்து வடபழனி வரை இடையில் எந்த ரெயில் நிலையத்திலும் நிற்காமல் ரெயிலை இயக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்தநிலையில், சாலிகிராமம் வேர் ஹவுஸ் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு, விருகம்பாக்கம் தெற்கு மெட்ரோ என்றும், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை இணைக்கும் 5-வது வழித்தடம் 44.6 கி.மீ தூரம் கொண்டது. இது, மாதவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், கோயம்பேடு, ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் வழியாக செல்கிறது.

பெயர் மாற்றம்

இந்தப்பாதையில் உள்ள விருகம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு, விருகம்பாக்கம் வடக்கு மெட்ரோ ரெயில் நிலையம் என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com