நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

நாளை (புதன் கிழமை) மே தினம் கொண்டாடப்படுகிறது.
நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
Published on

சென்னை,

நாளை மே தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாகும். இதனால் சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 8 முதல் 10 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com