மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து

தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து
Published on

ஊட்டி,

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது. இந்த ரெயிலில் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரியின் ஹில்குரோவ் அருகே மலை ரெயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால், தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com