மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,582 கன அடியாக நீடிப்பு

நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1,582 கன அடியாகக் குறைந்தது.
மேட்டூர் அணை
Published on: 

மேட்டூர்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைகிறது.

நீர்வரத்து

அதன்படி, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,590 கன அடி நீர் வந்தது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1,582 கன அடியாகக் குறைந்தது. இன்றும் அதே அளவில் நீர்வரத்து நீடிக்கிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.68 அடியாகவும், நீர் இருப்பு 20.88 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com