மேட்டூர் அணை நீர்மட்டம் 75.65 அடியாக குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 75.65 அடியாக குறைந்தது
Published on

சேலம்,

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கை கொடுக்காத நிலையில் மேட் டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் கடந்த மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு திறக்க வேண்டிய மேட்டூர் அணை இன்று வரை திறக்கப்பட வில்லை. இதனால் இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக் கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஜூன் மாதம் முதல் ஜனவரி வரை டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை அளிக்கும் மேட்டூர் அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 75.65 அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 91 கனஅடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com