செங்கோட்டையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

செங்கோட்டையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தென்காசி வடக்கு மாவட்டம் மற்றும் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளா பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளா சண்முகையா, நகர்மன்ற தலைவா ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனா. நகரச்செயலாளா கணேசன் வரவேற்றார். அதனை தொடாந்து அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினாகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினாகள் உள்பட நிர்வாகிகள் பலா கலந்து கொண்டனா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com