மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர் எம்.ஜி.ஆர்: பவன் கல்யாண்

தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர் எம்.ஜி.ஆர் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர் எம்.ஜி.ஆர்: பவன் கல்யாண்
Published on

சென்னை,

அதிமுக நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் , எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர், பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் , தமிழ் சினிமாவை பாமரர்களின் ஊடகமாக்கிய புரட்சி நடிகராவார்.

புரட்சித்தலைவரின் 108வது பிறந்தநாளில் தொலைநோக்கு கொண்ட அவரது தனித்துவமான நிர்வாகத்திறனையும், மக்களின் மேம்பாட்டின் மீது அவர் கொண்டிருந்த மாறாப்பற்றையும் எண்ணி வியக்கிறேன். மக்கள் பணியில் அவர் என்றும் எமது பேராசானாக, வழிகாட்டி நிற்கிறார். ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ். என தெரிவித்துள்ளார் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com