புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிக்கலாம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிக்கலாம்
Published on

வெளிமாநிலங்களில் இருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்து இ-ஷார்ம் இணையதளத்தில் பதிவு செய்த தொழிலாளர்களில், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு புதிய மின்னணு ரேஷன் அட்டை வழங்கப்படும். மேலும் தற்காலிகமாகவோ, குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து, அவர்களது சொந்த மாநிலத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களும், புதிய மின்னணு ரேஷன் அட்டை வேண்டி உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி விண்ணப்பங்களை மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும். புதிய ரேஷன் அட்டை பெற்றவுடன் 'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' என்ற திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே வெளிமாநிலத்தில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்களும், தற்காலிகமாக அல்லது குறுகிய காலத் தேவைக்காக குடும்பத்தை விட்டு, புலம் பெயர்ந்து வந்தவர்களும், தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com