மிலாடி நபி திருநாள்: இஸ்லாமிய சொந்தங்களுக்கு சீமான் வாழ்த்து

இறைவன் அல்லாவின் பேரருள் கிடைக்கப்பெற அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
சீமான் வாழ்த்து
Published on

சென்னை,

இஸ்லாமிய சொந்தங்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகள் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

வாழ்த்து

இறைவன் திருப்பெயரால் அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் கற்பித்த மகத்தான வழிகாட்டி!

போற்றுதற்குரிய பெருமகனார் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட 'மீலாடி நபி' திருநாளில் என்னுயிர் இஸ்லாமியச் சொந்தங்களுக்கு அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய எல்லாம்வல்ல ஏக இறைவன் அல்லாவின் பேரருள் கிடைக்கப்பெற அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com