பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு; முதல்-அமைச்சருக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் நன்றி

பால் உற்பத்தியாளர்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டு அரசு இந்த அறிவிப்பை அறிவித்தது வரவேற்கத்தக்கது.
ஈ.ஆர்.ஈஸ்வரன்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி லிட்டருக்கு ரூ.44 என அறிவித்ததற்கு விவசாயிகள் சார்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று தமிழக சட்டமன்ற பேரவையில் பால் கொள்முதல் விலையை மேலும் மூன்று ரூபாய் உயர்த்தி லிட்டருக்கு ரூ.44 என அறிவித்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தீவனங்களின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், பால் உற்பத்தியாளர்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டு அரசு இந்த அறிவிப்பை அறிவித்தது வரவேற்கத்தக்கது.

விவசாயிகள் சார்பாக நன்றி

இந்தாண்டு விவசாயத்திற்கு காவிரியில் நீர் திறக்காதது, முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்யாதது போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பால் கொள்முதல் விலை உயர்வு என்பது அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். இந்த அறிவிப்பை அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com