

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலவச சிற்றுந்து சேவை தொடங்கிய 4 நாட்களிலேயே பழுதடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த 4 சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் இந்த சிற்றுந்துகள் வழங்கப்பட்டன.
கடந்த நவம்பர் 13-ந்தேதி இந்த இலவச சிற்றுந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. திருச்செந்தூர் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களை கட்டணமின்றி அழைத்துச் செல்லும் வகையில் இந்த சிற்றுந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், சேவை தொடங்கப்பட்டு வெறும் 4 நாட்களே ஆன நிலையில், சிற்றுந்து ஒன்று பழுதடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பக்தர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலவச போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கந்த சஷ்டி விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், ரூ.1 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட சிற்றுந்துகளில் ஒன்று பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே பழுதடைந்தது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.