

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் தூய்மை பணி என்பது சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான வீதிகள் குறுகலாக இருப்பதால் எந்திரங்கள் கொண்டு கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களே அனைத்து தூய்மை பணியும் செய்ய வேண்டி இருப்பதால் தூய்மை பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
இதனால் குறுகலான தெருவிலும் எளிதில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் நவீன மினி ஜே.சி.பி. எந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகலான தெருக்களிலும் சென்று விரைவாக வாருகால் தூய்மை பணிகளை செய்ய முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எந்திரத்தை நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தூய்மை பணிகளுக்காக ஒப்படைத்தார்.