அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து ராஜகிரிக்கு புறப்பட்டது

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு புறப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து ராஜகிரிக்கு புறப்பட்டது
Published on

சென்னை,

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு புறப்பட்டது. வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கண்ணுவின் வயலில் மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. அஞ்சலிக்கு பிறகு அரசலாறு அருகே அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவபடத்தின் முன் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com