தூத்துக்குடியில் "தீர்வு" குறும்படத்திற்கு முதல் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்


தூத்துக்குடியில் தீர்வு குறும்படத்திற்கு முதல் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
x

பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! என்ற தலைப்பில் தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் குறும்பட போட்டி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டம் தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் நடந்த குறும்பட போட்டியில் பொது பிரிவில் பெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு குறும்பட போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் அருந்ததி அரசு இயக்கிய "தீர்வு" என்ற குறும்படம் முதல் பரிசு பெற்றுள்ளது. இதற்கான ரூ.25 ஆயிரம் காசோலையை அமைச்சர் கீதா ஜீவனிடம் இருந்து அருந்ததி அரசு பெற்றார்.

அருந்ததி அரசிடம் தீர்வு குறும்படம் குறித்து கேட்டபோது, "குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு சட்ட மற்றும் உளவியல் ரீதியான தீர்வுகளை பெற முடியும் என்பதை மையக் கருத்தாக கொண்டும், அனைத்து குடும்ப பிரச்சினைகளுக்கும் தற்ெகாலை தீர்வல்ல என்பதை உணர்த்தும் விதமாகவும் இப்படத்தை இயக்கியுள்ளேன்.

தீர்வு குறும்படத்திற்கு முதல் பரிசு வழங்கிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், சமூகநலத்துறை அலுவலர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நீம் பவுண்டேசன் பகுஜன் லூயிஸ் தயாரிப்பில், எனது இயக்கத்தில் உருவான "தீர்வு" குறும்படத்தில் நடித்துள்ள அனைத்து திரைக்கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசையமைப்பாளர், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், முத்துநகர் திரைப்படக் கலைஞர்கள் சங்க நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

1 More update

Next Story