அங்கன்வாடியில் கெட்டுப்போன முட்டை வழங்கினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை

தூத்துக்குடி அங்கன்வாடி மையத்தில், குழந்தைக்கு கெட்டுப்போன முட்டை வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
அங்கன்வாடியில் கெட்டுப்போன முட்டை வழங்கினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை
Published on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 15, 16, 17-வது வார்டுகளுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பி&டி காலனி பகுதியில் நடைபெற்றது. முகாமை பார்வையிட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாதவது:

'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் மூலம், மாநகராட்சிப் பகுதியில் இதுவரை 6 முகாம்கள் நடத்தப்பட்டு, அதன்மூலம் 7,402 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் முட்டைகள் நாள்தோறும் பரிசோதனைக்கு பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என கூறி உள்ளோம்.

ஆனால் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அங்கன்வாடி மையத்தில், குழந்தைக்கு கெட்டுப்போன முட்டை வழங்கியது மற்றும் அது தொடர்பான ஆடியோ வெளியாகி வைரலான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுள்ளார். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக அரசுக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையிலும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கெட்டுப் போன முட்டைகளை வழங்கினாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com