

சிவகாசி,
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக இரண்டு இடங்களை நேரில் ஆய்வு செய்தேன்.
1. பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியின் அபாய நிலை
2. மக்கள் அடர்த்தி மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, மிகவும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது எனது முதன்மை பொறுப்பு. அதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய தீயணைப்பு நிலையம் விரைவில் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வெறும் வார்த்தைகளாக அல்லாமல், செயலாக்கமாக மாற்றுவதே எங்கள் அரசின் நோக்கம். மக்கள் நலனும், பாதுகாப்பும் எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.