ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதயவியல் நிபுணர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர்.

இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார். அவருடன் பூந்தமல்லி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி உடன் இருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com