

கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட அமைச்சர் மரியவில்சன்பக்தர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படும் என்று உறுதிகடலூர், ஆக.26-நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.அந்த வகையில் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் புதுச்சேரியில் இருந்து நேற்று காலை வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.
மாலை 5 மணி அளவில் கடலூர் வருகை தந்த அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சென்னையில் இருந்து கடந்த 27 ஆண்டுகளாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்கிறேன். இந்த வருடம் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளதால், வேளாங்கண்ணி மாதாவிற்கு நன்றி கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனக்கு மட்டுமின்றி, தமிழகத்தி்ற்கும் நல்லது நடந்துள்ளது.அதனால் இந்தாண்டு தொடர்ந்து 28-வது முறையாக சென்று நன்றி சொல்ல பாதயாத்திரை செல்கிறேன்.
பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதால் சென்னைக்கு பதிலாக, புதுச்சேரியில் இருந்து புறப்படுகிறேன்.ஏற்கனவே சாதாரணமானவனாக இருந்தேன். ஆனால் தற்போது அமைச்சராக இருப்பதால், ஒவ்வொரு மாவட்டத்தையும் கடந்து செல்லும் போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் மனு அளிக்கின்றனர். இதுதொடர்பாக துறை சார்ந்த அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், கழிவறை, முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக மேற்கொள்ளவும், அடுத்தாண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.