தாராபுரத்தில் 15 ஊராட்சிகளுக்கு உட்பட்ட விவசாயிகளுடன் அமைச்சர் என்.ஆனந்த் சந்திப்பு

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர் என்.ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தாராபுரத்தில் 15 ஊராட்சிகளுக்கு உட்பட்ட விவசாயிகளுடன் அமைச்சர் என்.ஆனந்த் சந்திப்பு
Published on: 

திருப்பூர்,

தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்படி, இன்று (26.09.2026) சனிக்கிழமை, த.வெ.க. பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் எம்.எல்.ஏ., தாராபுரம் அடுத்த மருதூர் பகுதியில் 15 ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ், பால்வளத் துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாசா சேதுபதி, மாண்புமிகு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், மதுரை தெற்கு எம்.எல்.ஏ. கோபிசன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர் என்.ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com