குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி முயற்சி - நிர்மல் குமார் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின்தான் எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சி செய்வதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி முயற்சி - நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மேலும் பேசியதாவது;

”தவெக அரசு 30 நாட்களில் கவிழ்ந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். எந்த தைரியத்தில் அவர் இதை சொல்கிறார். அவர்கள்தான் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். ஸ்டாலின் தான் எங்கள் எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சிக்கிறார். அதனால்தால் இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்று அவர் கூறுகிறார். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கின்றனர். இன்று கூட நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்கள் எங்களுடன் இருக்கின்றனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது விஷயம் சாதாரணமானது கிடையாது. சாதாரண யாரைப்பற்றியும் அப்படி பேச வேண்டிய அவசியம் கிடையாது. முதல்-அமைச்சரை பற்றி அவ்வாறு பேசியுள்ளார். அதனால்தான் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com