அமைச்சர் பர்வேசுக்கு 30-ந்தேதி திருமணம்: முதல்-அமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்பு

திருமண நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
அமைச்சர் பர்வேசுக்கு 30-ந்தேதி திருமணம்: முதல்-அமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்பு
Published on: 

சென்னை,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேசுக்கு வருகிற 30-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. மணமேல்குடியைச் சேர்ந்த ரேஷ்மா என்பவருடன் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற உள்ளது.

நேரில் அழைப்பு

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இந்த திருமண நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில், தனது திருமணத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் விஜய்க்கு அமைச்சர் முகமது பர்வேஸ் நேரில் அழைப்பு விடுத்தார்.

X