எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானதற்கு காவல்துறை காரணம் இல்லை என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனா.

இதற்கிடையே மாணவி கொடுத்த புகார் நகழ், எப்.ஐ.ஆர். காப்பியை வெளியிட்டது யார் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின்போது நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறையை கடுமையாக கண்டித்து இருந்தனா. மேலும் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானதற்கு காவல்துறை காரணம் இல்லை என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்

இணைய வழியில் நிர்வகிக்கும் சி.சி.டி.என்.எஸ் (CCTNS) அமைப்பின் தொழில்நுட்பக் கோளாறே காரணம். காவல்துறை காரணம் இல்லை. அண்ணா பல்கலை. விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். 

இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் எந்த தவறும் இல்லை" என்று அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com