மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு: ஆணைகளை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்

விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வந்த 12 பேர் முதுநிலை விரிவுரையாளர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு: ஆணைகளை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்
Published on

சென்னை,

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வந்த 7 பேர் இணை இயக்குநர் மற்றும் முதல்வராகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதேபோல், விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வந்த 12 பேர் முதுநிலை விரிவுரையாளர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளை பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ந.லதா மற்றும் இணை இயக்குநர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com