அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி மீண்டும் ஐகோர்ட்டில் மனு

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி மீண்டும் ஐகோர்ட்டில் மனு
Published on

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 16-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி இன்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வழக்கில் ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது விசாரணையில் தான் தெரியவரும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என்றும், ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாக கருதவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com