

மதுரை,
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளநீருடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்படுகிறது. ஆலைகளின் ரசாயன கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் இவ்வாறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் குளிக்கும்போது பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பால் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது என சொல்லும் அமைச்சருக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும்.
எகிப்து வெங்காயம் என்பதை ஈஜிப்து வெங்காயம் என பேசியதற்கு என்னை சின்ன பசங்கள் எல்லாம் தெர்மாக்கோல் என்று எப்படி எல்லாம் கிண்டல் செய்தீர்கள். ஆனால் அமைச்சர் பேசுவதற்கு எல்லாம் இப்போ எங்கே போனீங்க?
பசும்பொன் வந்தால் விஜய்க்குத்தான் பெருமை. எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆர்.போன்று வர முடியாது. தனுசை பார்த்து விஜய்யின் கட்சிக்காரர்கள்தான் பயப்படுகிறார்கள். சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வந்தாலும் நல்லதுதானே? ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.