நெல்லையில் ஆய்வுப் பணிக்கு சென்ற அமைச்சர் வன்னி அரசு; டிரைவரை பாம்பு கடித்ததால் பரபரப்பு

முண்டந்துறை பகுதியில் ஆய்வுப் பணிக்காக சென்றபோது, அமைச்சருடன் வந்த டிரைவரை மலைப்பாம்பு கடித்துள்ளது.
நெல்லையில் ஆய்வுப் பணிக்கு சென்ற அமைச்சர் வன்னி அரசு; டிரைவரை பாம்பு கடித்ததால் பரபரப்பு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், பழங்குடியின மக்கள் நலன் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இன்று நெல்லைக்கு வருகை தந்தார்.

தொடர்ந்து பாபநாசம் முண்டந்துறை பகுதியில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அமைச்சருடன் வந்த டிரைவர் மணிகண்டன் என்பவரை மலைப்பாம்பு ஒன்று கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மணிகண்டனை மீட்டு அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது மணிகண்டன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com