‘அமைச்சர்களுக்கு அவை மரபும், சட்டமும் தெரியவில்லை’ - துரைமுருகன் விமர்சனம்

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஓரளவு நல்ல முறையில்தான் அவையை நடத்துகிறார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
‘அமைச்சர்களுக்கு அவை மரபும், சட்டமும் தெரியவில்லை’ - துரைமுருகன் விமர்சனம்
Published on

சென்னை,

த.வெ.க. அமைச்சர்களுக்கு அவை மரபும் தெரியவில்லை, சட்டமும் தெரியவில்லை என தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நீண்ட நாள் சட்டசபையில் இருந்த அனுபவம் உள்ளவர். அவர் தற்போது சட்டசபையை நடத்துகின்ற விதத்தைப் பாக்கும்போது, ஓரளவு நல்ல முறையில்தான் அவையை நடத்துகிறார். அதை மறுக்க முடியாது. ஆனால் சட்டசபையில் நடக்கும் கூத்துகளை அவர்தான் தடுக்க வேண்டும்.

த.வெ.க. அமைச்சர்களுக்கு அவை மரபும் தெரியவில்லை, சட்டமும் தெரியவில்லை. சட்டசபைக்குள் முதல் முறையாக செல்லும் எம்.எல்.ஏ.க்களுக்கு, அவையின் விதிமுறைகள் பற்றிய புத்தகத்தைக் கொடுப்பார்கள். அதை தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. அதை அவர்கள் வாங்கிப் படிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com