வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

மாணவர்களின் சார்பில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த அமைச்சர் என்.ஆனந்த், அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
Published on

சென்னை,

“இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தருமான, 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படத்திற்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- .

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, இன்று (05.09.2026) சனிக்கிழமை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் MLA அவர்கள், சென்னை காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, நாட்டுப்பற்றின் அடையாளமாக திகழ்ந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் இழுத்த செக்கிற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவர்களின் சார்பில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து, மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G.அருண்ராஜ், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் , சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் M.அருள் பிரகாசம் அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர்வே.ராஜாராமன், இ.ஆ.ப. அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com