சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுகவின் மீது பழி போடுவதில் மட்டுமே குறியாகவுள்ளது தவெக அரசு - கனிமொழி

பொறுப்பேற்காமல் அனைத்திற்கும் திமுகவின் மீது பழி போடுவதில் மட்டுமே குறியாகவுள்ளது தவெக அரசு என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி
கோப்புப்படம்
Published on

சென்னை,

திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கல்பாக்கம் அருகே சமூகவிரோதிகளால் 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியும், கோவை - சுகுணாபுரத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட செய்தியும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்காமல், அனைத்திற்கும் திமுகவின் மீது பழி போடுவதில் மட்டுமே குறியாகவுள்ளது, தவெக அரசு.

இத்தனை ஆண்டுகளாக திரைப்படங்களில் தொடங்கி பல்வேறு தளங்களிலும் பெண்களுக்கு எதிராகக் கலாசார வகுப்பெடுத்தவர்களும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களே காரணம் என்றவர்களும், சுய ஒழுக்கம் இச்சமூகத்தில் ஆண்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலை மேலும் வளரவே வழிவகுத்தனர். முதல்-அமைச்சர் விஜய்யும் தனது திரைப்படங்கள் மூலமாக அதைத் தானே சொன்னார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com