திண்டுக்கல்லில் 2 தலைகளுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

திண்டுக்கல்லில் கன்று ஈன்ற முடியாமல் போராடிய ஒரு பசுவுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்தனர்.
2 தலைகளுடன் கன்றுக்குட்டி
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் மோளப்பாடியூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வளர்த்த பசு ஒன்று சினையாக இருந்தது. நேற்று கன்று ஈன்ற முடியாமல் போராடிய அந்த பசுவுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்தனர்.

அதிசய ஆண் கன்றுக்குட்டி:

அப்போது பசுவிற்கு 2 தலைகள் ஒட்டிய நிலையில் அதிசய ஆண் கன்றுக்குட்டி பிறந்தது. இந்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பசுவையும், அதிசய கன்றுக்குட்டியையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கன்றுக்குட்டியால் எழுந்து நிற்க முடியாததால் பசுவிடம் இருந்து பால் கறந்து பாட்டில் மூலம் கன்றுக்குட்டிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com