

சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். விளையாட்டு மேம்பாடு தொடர்பாக பட்டப்படிப்பு படித்து வந்த அவர், தற்போது படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் கலைஞர் தொலைக்காட்சியில் நிர்வாக பயிற்சி மேற்கொண்டார். மேலும், ரெட்ஜெயண்ட் நிறுவனத்தையும் அவர் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்பநிதி படித்த கல்லூரியில் ஜூலை மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, பேரன் இன்பநிதி ஆகியோர் ஜூலை 5-ந் தேதி லண்டன் புறப்பட்டு செல்கின்றனர். பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின், சுமார் 10 நாட்கள் அங்கேயே தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு, சென்னை திரும்புகிறார்.