தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன். தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம். அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள். உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com