

சென்னை,
தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சுகன்யா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். தாராபுரம் அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சி சாலை, பெரியகடை வீதி வழியாக மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரோடு ஷோவிவின்போது மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்கள், பூங்கொத்துகள் மற்றும் சால்வைகளை மக்கள் அன்பளிப்பாக வழங்கினர். ரோடு ஷோ முடித்துவிட்டு பெரிய கடை வீதி பகுதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். பின்னர் மு.க.ஸ்டாலினுடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு உடுமலை சாலையில் மாருதி நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.