ராமநாதபுரம்: நடைபயிற்சியின்போது வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்: நடைபயிற்சியின்போது வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

ராமநாதபுரம்,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அவர் இன்று காலை பரமக்குடியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளரும் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com