

சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து விழாவுக்கு வந்த திமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 35 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் தரவேண்டுமென கோரிக்கை முன்வைத்துள்ளது.
ஆனால் திமுகவோ 28 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் தர முன்வந்துள்ளது. இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.